Search

பூமிக்கடியில் மண்டபத்துடன் ஒரு கிணறு | நடவாவி கிணறு | Nadavavi kinaru

Updated: Jul 19

என்னது பூமிக்குள்ள மண்டபம் அதுக்குள்ள கிணறா? ஆமாங்க பூமிக்குள்ள ஒரு மண்டபம் அமைத்து அதுக்குள்ள கிணறு வெட்டியிருக்காங்க. இந்த கிணறை நடவாவி கிணறு என்று சொல்றாங்க. இந்த கிணறு கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அய்யங்கார் குளத்தில் இருக்குது. நடவாவி = நட + வாவி. நடன்னா நடந்து வருதல் வாவின்னா கிணறு என்று பொருள். நடந்து உள்ள போனா மண்டபத்துக்குள் கிணறு.


இந்த கிணறு பக்கம் வந்ததும் நம்ம கண்ணுல படுறது இரண்டு தூண்கள் தான். இந்த கல்தூண்கள்லஒரு இடம் விடாம முழுக்க முழுக்க சிற்பங்கள் செதுக்கி வைத்து இருக்காங்க. தூணோடு உச்சியில் கஜலட்சுமியின் சிற்பம் நம்மை வரவேற்க, தூண்களோட இரண்டு பக்கத்திலும் யாளியின் மீது வீரர்கள் அமர்ந்து காவல் காப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது



இந்தத் தூணை தாண்டி உள்ளே போனால் படிக்கட்டுகள் சுரங்கம் போல கீழே இறங்கிப் போகும். இந்த கிணற்றில் மொத்தம் 48 படிக்கட்டுகள், இது 48 மண்டலங்களை குறிக்கும். இந்த கிணத்துல வருசம் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கும் அதனால 27 படிக்கட்டுகள் வரைக்கும்தான் நம்மால் போக முடியும். இது 27 நட்சத்திரங்களை குறிக்கும். பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்தை 12 தூண்கள் தாங்குது. இது 12 ராசி பலன்களை குறிக்கும். மண்டபத்துக்கு நடுவுல கிணறு இருக்குது. வருடத்திற்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமி நாட்களில் மட்டும் ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றுவார்கள். அந்த சமயம் காஞ்சிபுரம் வரதராஜர் கோவில்ல இருந்து வரதர் வீதிஉலா வந்து நடவாவி கிணற்றில் நீராடி, பாலாற்றில் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் காஞ்சிபுரம் செல்வார்.


இந்த இடத்தில இந்த ஒரு கிணறு மட்டும் தான் வெட்டினார்களா அப்படின்னு கேட்டீங்கன்னா அதுதான் இல்லை, இந்த இடத்துல இந்த கிணறு சேர்த்து மொத்தம் நான்கு கிணறு வெட்டுனாங்க. அதுல ஒரு கிணறு இன்னைக்கும் நல்ல முறையில செயல்பாட்டுலதான் இருக்குது. இரண்டு கிணறுகள் முழுசா அழிஞ்சிருச்சு. மீதமுள்ள ஒரு கிணறு இருக்கு ஆனா இல்ல. புரியலையா? அழிவோட விளிம்புக்கு போயிட்டு இருக்கு. நடவாவி கிணற்றில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த பழமையான நடவாவி கிணறு இருக்குது. இந்தக் கிணத்துல உள்ள தூண்கள் நாம ஏற்கனவே பார்த்த நடவாவி கிணற்று தூண்களை நினைவுபடுத்தும். இந்த கிணத்துக்குள்ள நம்மால் போக முடியாது புதர்கள் மண்டி இருக்குது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு போயிடுச்சு. பழமையைப் பாதுகாக்க தவறியது நம்மளுடைய அறியாமை. இந்த இடத்தோட முழு காணொளியை பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை தட்டவும்





13 views0 comments