Search

இரும்பை தங்கமாக மாற்றும் மகாசித்தர் காலங்கிநாதர் | Kalanginathar

Updated: Feb 19

மதுரை மாவட்டம் பேரையூர் மொட்ட மலை அடிவாரத்தில முருகன் கோவிலும் மலைக்கு உச்சியில 13ம் நூற்றாண்டுல பாண்டிய மன்னன் கட்டிய சிவன் கோவிலும் இருக்குது. இந்த மலைக்கு பின் பக்கத்துல ஒரு குகை இருக்குது, இந்த குகையில சித்தர் மகான் காலங்கி நாதர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. காலங்கிநாதரை பொதுவா கஞ்சமலை சித்தர்ன்னு சொல்வாங்க, காலங்கிநாதருக்கும் பேரையூரில் இருக்கிற இந்த மொட்ட மலைக்கும் என்ன சம்பந்தம் பார்க்கலாம் வாங்க.

காலங்கிநாதர் பெயரை பிரித்துப் பாருங்கள் (காலங்கி = கால் + அங்கி) கால் என்றால் காற்று, அங்கி என்றால் உடை அல்லது உடல் என்று பொருள். காற்றை உடலாக உடையாகக் கொண்டவர் காலங்கி நாதர்.


காலங்கி நாதர் 18 சித்தர்களில் மிக முக்கியமானவர். காலனைப் போன்று நெருப்பானவர் அந்தக் காலனால் கூட நெருங்க முடியாதவர். இவர் திருமூலரின் சீடர்களில் மிகவும் முக்கியமானவர். பல யுகங்கள் கடந்து வாழ்ந்தவர் காலங்கிநாதர். யுகங்கள் கடந்து பல சித்தர்களிடம் ஆசி பெற்றவர் காலங்கிநாதர். இவர் மூலிகையை தங்கமாக மாற்றும் அறிவியல் தெரிந்தவர். போகரின் குருவாக அறியப்படுபவர்.


காலங்கிநாதர் எப்படி இந்த மலைக்கு வந்தார்.

முன்னொரு யுகத்தில் உலகமே மூழ்கும் அளவிற்கு பிரளயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் காலங்கிநாதர் கண்முன் ஒரு பெரிய மலை தென்பட்டது. அவரும் அந்த மலை உச்சியை நோக்கி நடக்கத் தொடங்கினார். போகும் வழியில் பல சித்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி விட்டு மீண்டும் மலை உச்சிக்கு விரைந்தார். செல்லும் வழியில் ஒரு புலி படுத்து இருந்தது ஆனால் அது அவரை தாக்கவில்லை அந்த புலி சித்தர் ஒருவர்தான் என்பதை குறிப்பால் உணர்ந்த அவர் அந்த புலியை வணங்கிவிட்டு மீண்டும் மலையேறினார். இப்படி செல்லும் வழி எல்லாம் சித்தர்களை சந்தித்து விட்டு கடைசியாக அவர் அடைந்த இடம் சதுரகிரி. அனைத்து சித்தர்களையும் இந்த மலையில் அவர் சந்தித்ததால் அவர் இங்கேயே நெடுங்காலம் தங்கிவிட்டார்.


மலையில் தங்கக்கிணறு

இவர் சதுரகிரியில் தங்கியிருந்த சமயம் வணிகர் ஒருவர் சிவன் கோவிலை பாதி கட்டிவிட்டு பணம் இல்லாததால் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். பின் உதவி வேண்டி காலங்கிநாதரிடம் சரணடைந்தார். வணிகர் தன் துயரை காலங்கிநாதரிடம் எடுத்துக் கூறினார். காலங்கி நாதரோ மௌனம் காத்தார். ஏனென்றால் தான் கற்ற வித்தை தவறான வழியில் சென்று விடக்கூடாது. நாட்கள் பல சென்றது வணிகரின் சிவன் கோவில் கட்டும் ஆர்வத்தைக் கண்டு காலங்கிநாதர் வணிகருக்கு உதவி செய்தார். காட்டில் இருந்து மூலிகையைப் பறித்து வந்து வராக தைலத்தை உருவாக்கினார். வராக தைலத்திலிருந்து தங்கம் தகதகவென பொங்கி வந்தது. அந்த தங்கத்தின் ஒளியில் சதுரகிரியே சூரியனைப் போல மின்னியது.

வணிகரும் அந்த தங்கத்தை வைத்து சிவன் கோவிலை கட்டி முடித்தார். கோவிலை கட்டி முடித்த பின்னரும் கூட தங்கம் தகதகவென பொங்கி வந்தவரே இருந்தது. இதை அறிந்த காலங்கிநாதர் அந்த வராக தைலத்தை சதுரகிரி மலையில் ஒரு கிணற்றுக்குள் மறைத்து வைத்தார். அந்தக் கிணற்றுக்கு பாதுகாவலாக பேச்சி அம்மனையும், கருப்பசாமியையும், சுடலை மாடசாமியையும் நியமித்தார். சித்தர்கள் வாழ்ந்த இந்த சதுரகிரி மலையிலே பல காலம் தங்கி விட்டார்

பேரையூர் மொட்ட மலைக்கு பின்புறம் உள்ள மலைத்தொடர் சதுரகிரி மலைத் தொடர். இவர் சதுரகிரியில் தங்கியபோது இந்த மலையில் தங்கி தவம் செய்ததாக உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. இந்த குகை காலங்கிநாதர் குகை என்று அழைக்கப்படுகிறது.


இந்த குகையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள காணொளியைக் காணவும்



10 views0 comments