Search

மதுரை T.கல்லுப்பட்டி மலையில் பாண்டிய மன்னனின் சோழ நாடு

Updated: Feb 3

மதுரை மாவட்டம் கல்லுபட்டில இருந்து 2 கிமீ தொலைவில் தேவன் குறிச்சி அக்னீஸ்வரர் மலை இருக்குது. மலைக்கு உச்சில ஒரு பெருமாள் கோவிலும், மலைக்கு அடிவாரத்துல 800 வருட பழமையான பாண்டிய மன்னன் கட்டிய சிவன் கோவில் இருக்குது. மிகப்பெரிய வரலாறு புதைஞ்சி கிடக்குற மலை. இந்த மலையோட வரலாறு என்ன? சிவன் கோவிலோட வரலாறு என்ன? எல்லாத்தையும் பார்க்கலாம்.


மலையேற்றம்

இந்த மலை பார்க்க சின்னமலையா தெரிஞ்சாலும் மலையேற்றம் ரொம்ப கடினமா இருக்கும். முதல்ல ஒரு ஆஞ்சநேயர் கோவில் வரும். அந்த ஆஞ்சநேயர் கோவில் வரைக்கும் படிக்கட்டுகள் இருக்கும். அதற்கப்புறம் மலையேற்றம் கடினமானதா இருக்கும். மலையடிவாரத்துல உள்ள சிவன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கோவில், வரலாற்றுல ரொம்ப முக்கியமான ஒரு பாண்டிய மன்னன் கட்டிய சிவன் கோவில்.


ஒரு 5 நிமிட மலையேற்றத்துல நம்ம ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிடலாம். இங்க ஆஞ்சநேயரை தரிசனம் பண்ணிட்டு ஒரு 5 நிமிட ஓய்வுக்கு அப்புறமா மறுபடியும் மலையேற ஆரம்பிக்கலாம்.


மலையேற ஆரம்பிச்சுடோம். இதற்கப்புறம் மலையேற்றம் ஒரு குறுகலான பாதையாவும், கடினமான பாதையாவும் இருக்க போகுது. நான் சொல்லுவேன் என்னைக்குமே மலை ஏறும் போது சிறு சிறு கற்கள் ரொம்பவே ஆபத்தானது. இந்த கற்கள் மேல கால் வைக்குறப்ப கவனமா இருக்கனும். கவனமா இல்லைனா கீழ விழவும் வாய்ப்பிருக்கு. மலையேற்றத்துல எப்பவும் சுனைகள் இருந்து வர தண்ணீர், சிறு சிறு கற்கள் நமக்கு எதிரி.

Hill Top

நான் மலையேற ஆரம்பிச்சப்ப நல்ல வெயில், என்ன ரொம்பவே சோர்வடைய செய்யுது. பயணம் செங்குத்தா இருக்குறதும் ஒரு காரணம். இந்த மலையேறப்ப கண்டிப்ப நீங்க 1லி தண்ணீர் கொண்டு வந்தே ஆகணும். தண்ணீரை உடனே குடிக்காம கொஞ்சம் Relax பண்ணிட்டு மெதுவா குடிங்க. மலையேறுங்க. இந்த மலைல இருந்து பார்க்குறப்ப வீவ் செம்மையா இருக்கும். மலைக்கு உச்சில வீவ் இன்னும் அழகா இருக்கும்.


சித்திரை 1 உள்ளூர் மக்கள் நிறைய பேரு இந்த மலை ஏறுவாங்க. மலைக்கு உச்சியில பெருமாள் கோவில் இருக்கதால சனிக்கிழமைகளிலும் உள்ளூர் மக்கள் கொஞ்ச பேர் இந்த மலை ஏறுவாங்க. மலை உச்சிக்கு வந்துட்டோம். அங்க தெரியுது பாத்தீங்களா மலைக்கு மேலே உள்ள பெருமாள் கோவில். எல்லா பெருமாள் கோயில் போலவே இங்கேயும் பெருமாளுக்கு முன்னால விளக்குத்தூண் இருக்கும்.


இந்த மலை நம்ம மனசுக்கு ஒருவித அமைதியை கொடுக்கும். 360 டிகிரி கோணத்தில் நம்ம இயற்கையை ரசிக்கலாம். பெருமாள் கோவில் பின்னால ஒரு ஊற்று இருக்கு அந்த அந்த ஊற்ற அண்டா ஊற்று அப்டின்னு சொல்வாங்க. சரி பெருமாள் தரிசனம் பண்ணிட்டு ஒரு அரைமணி நேரம் இங்க ஓய்வு எடுத்து மறுபடியும் நம்ம கீழே இறங்க ஆரம்பிக்கலாம்.

Hill Top View

கீழே இறங்க ஆரம்பிக்கும் எப்போதுமே மலை ஏற்றத்தில் இருக்க கவனத்தை விட இரண்டு மடங்கு கவனம் இறங்குறப்ப இருக்கணும். கீழே போயிட்டு சிவன் கோவிலை பற்றி பார்க்கலாம்.


இந்த சிவன் கோவில் இப்ப இருந்து 800 வருடங்களுக்கு முன்னால மாறவர்மன் சுந்தரபாண்டியன் அப்படின்னு ஒரு பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ஒரு முக்கியமான கோவில். யார் இந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன்? ஏன் இந்த கோவில் ஒரு முக்கியமான கோவில்? தெரிஞ்சுக்கலாம் வாங்க.


அக்னீஸ்வரர் கோவில்

Sivan Tample

மலையடிவாரத்தில் அழகான சூழல்ல ஒரு கோட்டைச்சுவர் சூழ கருவறை, அர்த்த மண்டபம், இடை நாழி, மகா மண்டபத்துடன் ஒரு முன் மண்டபமும் காணப்படுகிறது. நந்தி, கொடிமரத்தோட, அழகான சிவன் கோவிலா இந்தக் கோவில் இருக்கிறது. உள்ளூர் மக்கள் இங்குள்ள சிவனை அக்னீஸ்வரர் ஆகவும் பார்வதிதேவியை கோமதியம்மன் ஆகவும் வழிபடுறாங்க. தொடர்ந்து வழிபாட்டில் இருக்கக்கூடிய ஒரு கோவில் பாண்டியர்களுக்கு அப்புறம் நாயக்க மன்னர்கள் காலத்தில் நாயக்க மன்னர்கள் இந்த கோவிலுக்கு நிறைய திருப்பணிகள் செஞ்சிருக்காங்க. இப்பவும் வழிபாட்டில் இருக்கக்கூடிய சிவன் கோவில்.


கோவில் கல்வெட்டு

Kalvettu

இந்த கோவிலில் கிடைக்கிற ஒரு கல்வெட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு கல்வெட்ட பார்க்கப்படுது. அந்தக் கல்வெட்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் பற்றி சொல்லுது. அந்த கல்வெட்டு சிவன் கோயில் தென்புற கோட்டைச்சுவர் ல தனி கல்லா இருக்கு. பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியனை அந்த கல்வெட்டில் எப்படி குறிப்பிடுறாங்கன்னா

"ஹீகோமாறபர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்க்கு" அப்படின்னு வருது.

இங்க "சோணாடு கொண்டருளிய அதாவது சோழநாட்டை கொண்டு வழங்கியருளிய சுந்தரபாண்டியன்"


முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் எழுச்சி:

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் உடைய எழுச்சிதான் சோழர்களுடைய வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம். 9ஆம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை மதுரை சோழர்கள் வசம் இருந்தது. மதுரை சோழர்கள் வசம் இருந்தாலும் பாண்டியர்கள் சோழர்களுக்கு வரி செலுத்தி மதுரையை ஆட்சி செய்தனர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டோட போர் செய்து சோழ நாட்டை கைப்பற்றி மதுரையை மீட்டெடுக்கார். அதனாலதான் இவர மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அப்படின்னு நிறைய இடத்தில சொல்லுவாங்க. அது மட்டும் இல்லாம சோழநாட்டை சோழர்களிடமே கொடுத்து வரி செலுத்தி ஆட்சி செய்து கொள்க ன்னு சொல்றாரு. அதனாலதான் கல்வெட்டுல "சோணாடு கொண்டு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன்னு" வருது.


இவர் சோழ நாட்டை கைப்பற்றது குறித்த கல்வெட்டு இந்த கோவிலில் வருது. அதனாலதான் இந்த கோவில் ஒரு முக்கியமான கோவில். முக்கியமான ஒரு கல்வெட்டு மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் தேவன் குறிச்சி மலைல அக்னீஸ்வரர் கோவில்ல இருக்கு.


மலைக்கு அடிவாரத்தில் சிவன் கோவில் இருக்கு. மலை உச்சியில் பெருமாள் கோவில் இருக்கு. மதுரைல நல்ல ட்ரெக்கிங் போனும் அப்படி நினைச்சாலும் டிரேக்கிங் போவதற்கு ஒரு நல்ல அழகான மலை. மலைக்கு உச்சிக்கு போறதுக்கு ஒரு ஒரு மணி நேரம் இறங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் மேல வீவ் வேற லெவல்ல இருக்கும். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, அடுத்து ஒரு மலையேற்றத்தில சந்திக்கலாம்.

நன்றி

வணக்கம்.







27 views0 comments