Search

வரலாற்றில் பாளையமும், பாளையக்காரர்களும் | Palayam and Palayakarargal

Updated: Feb 5

13ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை மதுரையை ஆட்சி செய்தது விஜயநகரப் பேரரசு. 15 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு கீழ் வருது. மதுரை நாயக்க மன்னர்கள்ல முதல் அரசர் விசுவநாத நாயக்கர். அவரோட ஆட்சிக்குக் கீழ் இருந்த மதுரை மண்டலத்தை மொத்தம் 72 பாளையங்களாக பிரித்தார். பாளையம் அப்படினா படைத்தளம். பாளையங்கள ஆட்சி செய்றவங்க பாளையக்காரர்கள். ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு தலைவன் அப்படின்னு மொத்தம் 72 பாளையக்காரர்கள் உருவாக்கப்பட்டன.


பாளையக்காரர்களின் அதிகாரம் என்ன? அவர்கள் அரசுக்கு என்ன செய்ய வேண்டும்?

மண்டல அரசு பாளையக்காரர்களுக்கு ஒரு சில அதிகாரங்களை கொடுத்திருந்தாங்க. என்னென்ன அதிகாரங்கள் பார்க்கலாம்,

1)பாளையக்காரர்கள் மக்களிடமிருந்து வரி வசூல் செய்து கொள்ளலாம்

2) தங்களுக்கும் தங்கள் மக்களுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான கோட்டைகளை உருவாக்கிக் கொள்ளலாம்

3) ராணுவப் படைத் தளங்களுக்கான தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம்


இதெல்லாம் சரி பாளையக்காரர்கள் மண்டல அரசுக்கு என்ன பண்ணனும்? மண்டல அரசுக்கு பிரச்சனை வர்றப்ப, போர் வர்றப்ப பாளையக்காரர்கள் மண்டல அரசுக்கு இராணுவப் படைத்தளங்களை அனுப்பனும். மக்களிடம் வரி வசூல் பண்றதுல ஒரு பகுதியை அரசுக்கு கொடுக்கணும், ஒரு பகுதியை ராணுவத்திற்கு செலவிடனும், இது போக மீதமுள்ள ஒரு பகுதியை தங்கள் தேவைக்கு வைத்துக் கொள்ளலாம்.


72 பாளையங்கள்

  1. அம்மையநாயக்கனூர்

  2. அத்திப்பட்டி

  3. அழகாபுரி

  4. ஆய்க்குடி

  5. ஆற்றங்கரை

  6. இளசை

  7. இரசக்கயனூர்

  8. இலக்கையனூர்

  9. இடையக்கோட்டை

  10. இராமகரி

  11. உதயப்பனூர்

  12. ஊற்றுமலை

  13. ஊர்க்காடு

  14. எட்டையபுரம்

  15. ஏழுமலை

  16. ஏழாயிரம் பண்ணை

  17. கடலூர்

  18. கல்போது

  19. கன்னிவாடி

  20. கம்பம்

  21. கண்டமனூர்

  22. கவுண்டன்பட்டி

  23. கடம்பூர்

  24. காமநாயக்கனூர்

  25. காடல்குடி

  26. காசையூர்

  27. குமரவாடி

  28. குளத்தூர்

  29. குருவிகுளம்

  30. கூடலூர்

  31. கொல்லப்பட்டி

  32. கொல்லங்கொண்டான்

  33. கோலார்பட்டி

  34. கோட்டையூர்

  35. கோம்பை

  36. சந்தையுர்

  37. சக்கந்தி

  38. சமுத்தூர்

  39. சேத்தூர்

  40. சிவகிரி

  41. சிங்கம்பட்டி

  42. சுரண்டை

  43. சொக்கம்பட்டி

  44. தலைவன்கோட்டை

  45. தேவாரம்

  46. தொட்டப்பநாயக்கனூர்

  47. தோகைமலை

  48. தும்பிச்சிநாயக்கனூர்

  49. படமாத்தூர்

  50. பாஞ்சாலங்குறிச்சி

  51. பாவாலி

  52. பெரியகுளம்

  53. போடிநாயக்கனூர்

  54. ரோசலைப்பட்டி

  55. வடகரை

  56. வாராப்பூர்

  57. விருப்பாட்சி

  58. வெள்ளிக்குன்றம்

  59. விரமலை

  60. நத்தம்

  61. நடுவக்குறிச்சி

  62. நாகலாபுரம்

  63. நிலக்கோட்டை

  64. நெற்கட்டும் செவல்

  65. மணியாச்சி

  66. மருங்காபுரி

  67. மன்னார்கோட்டை

  68. மலைப்பட்டி

  69. மருதவானையூர்

  70. முதுவார்பட்டி

  71. முல்லையூர்

  72. மேல்மாந்தை


Zamin - Old Photos


5 views0 comments