Search

திண்டுக்கல் சித்தர் மலையில் சித்த மகாலிங்கேஸ்வரரும் மர்மமான குகையும் | Dindugal Siddar malai

Updated: Feb 5

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைல இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் மேட்டுப்பட்டி சித்தர்மலை இருக்குது. மலைக்கு உச்சியில் 500 வருட பழமையான ஒரு சிவன் கோவிலும் மலைக்கு பின்னால பயங்கரமான ஒரு குகை இருக்கு. அந்த குகையில 2200 வருட பழமையான தமிழி கல்வெட்டு இருக்குது. அந்த கல்வெட்டுல மதுரையோட பெயர் வருது. இன்னைக்கு இந்த மலையோட வரலாறு என்ன பார்கலாம்.

hill steps

இந்த மலை ஏறுவதற்கு இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று கல்யாணிப்பட்டி வழியாக வர கரடுமுரடான மலைப்பாதை. மற்றொன்று S.மேட்டுப்பட்டி வழியாக வரும் படிக்கட்டுப் பாதை. நீங்க S.மேட்டுப்பட்டி வழியா வந்தீங்கன்னா அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரைக்கும் படிக்கட்டுகள் இருக்கும். மொத்தம் 1200 படிக்கட்டுகள். மலை ஏறப்ப உங்களுக்கு சோர்வா இருந்துச்சுன்னா ஓய்வெடுக்க அங்கங்கே நிழல் கூடமும் இருக்கு. ஓய்வெடுக்கும் பொழுது கூடவே நீங்க வைகை நதியோட அழகை ரசிக்கலாம்.

hill top view

சிவன் கோவில்:


ஒரு 45 நிமிட பயணத்தில் மலைக்கு உச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு வந்திடலாம். இந்த சிவன் கோவில் 15-ஆம் நூற்றாண்டில எடுத்து கட்டப்பட்டது. கோவிலில் உள்ள ஆவுடையார் சிற்பம் 1000 வருட பழமையான சிற்பம்ன்னு உள்ளூர் மக்கள் சொல்றாங்க. மூலவராக சிவன் லிங்க வடிவில் மேற்கு நோக்கியும், ஆவுடையார் வலது புறமாக அமைந்திருப்பது இந்த கோவிலின் கூடுதல் சிறப்பு. இங்க உள்ள சிவன் சித்தமகாலிங்கேஸ்வரர். சதுரகிரி போலவே இங்கேயும் சித்தர்கள் அதிகமா வாழ்ந்ததால, வாழ்ந்துகிட்டு இருக்குறதால இந்த மலையை சித்தர் மலைன்னு சொல்றாங்க. இப்பவும் இந்த மலைக்கு அடிவாரத்துல சித்தர்கள் நத்தம் அப்படின்னு ஒரு ஊரே இருக்குது.


Sivan Temple

இந்த கோவில் காலை 9 மணில இருந்து மாலை 4 மணி வரை திறந்திருக்கும். அதுவே பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களாக இருந்தா காலை 9 மணில இருந்து மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.


மலைப்பாறையில் நந்தி:

Nandhi

சிவன் கோவிலுக்கு நேரா மலையில் உள்ள சரிவில ஒரு பெரிய நந்தியோட உருவத்தை பாறையிலயே செதுக்கியிருக்காங்க. பிரம்மாண்டமான நந்தி. இதை எப்படி செதுக்கி இருப்பார்களோன்னு நான் யோசிச்சிட்டே மலைக்கு பின்னால் உள்ள சமணர் படுகைக்கு போனேன்.

சமணர் படுக்கையில் மதுரை

Jain Cave

இந்த சமணர் படுகையில் உள்ள குகை ஒரு பயங்கரமான குகை. இந்த குகையில பத்துக்கும் மேற்பட்ட சமணர் படுகைகள் இருக்கு. ஒவ்வொரு சமணப்படுகையிலயும் ஒரு கல்வெட்டு இருக்கு. அதுமட்டுமல்ல மலையோட நெற்றிப்பொட்டில உள்ள ஒரு கல்வெட்டில மதிரை என்ற பெயர் வருது. மதுரை எவ்வளவு பழமையான ஊருன்னு பாருங்க 2200 வருஷத்துக்கு முன்னாலயே மதுரையோட பெயர் கல்வெட்டில வருது. சமணப்படுகை பற்றியும் சமணர் படுகையில் உள்ள இந்த கல்வெட்டுகளைப் பற்றியும் நம்ம அடுத்து வர்ற பதிவுல பார்க்கலாம். மேலும் இந்த இடத்தை பத்தி தெரிஞ்சுக்க காணொளி பாருங்க.

நன்றி

வணக்கம்


36 views1 comment