Search

சாப்டூர் அரண்மனை | Saptur Aranmanai

Updated: Feb 12

மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி ல இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சாப்டூர் அப்படின்னு ஒரு அழகான கிராமம் இருக்குது. இந்த ஊர்ல 350 வருட பழமையான ஒரு அரண்மனை இருக்கு. இந்த அரண்மனை யோட வரலாறு என்ன? இந்த அரண்மனை இப்ப எப்படி இருக்கு? எல்லாத்தையும் பாக்கலாம்.

Saptur aranmanai

இந்த அரண்மனை சாப்டூர் பாளையத்துக்கு சொந்தமான அரண்மனை. பாளையம்னா என்ன? 16 ஆம் நூற்றாண்டில மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு கீழ் வருது. மதுரை நாயக்க மன்னர்கள்ல முதல் அரசர் விசுவநாத நாயக்கர். அவரோட ஆட்சிக்குக் கீழ் இருந்த மதுரை மண்டலத்தை மொத்தம் 72 பாளையங்களாக பிரித்தார். பாளையம் அப்படினா படைத்தளம். பாளையங்கள ஆட்சி செய்றவங்க பாளையக்காரர்கள். ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு தலைவர்ன்னு, மொத்தம் 72 பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டன.


சாப்டூர் பாளையம்

இந்த 72 பாளையங்களில் முக்கியமான ஒரு பாளையம் சாப்டூர் பாளையம். சாப்டூர் ஜமீனுக்கு சொந்தமான விவசாய நிலப்பரப்பு 75 ஆயிரம் ஏக்கர். பாளையத்தோட மொத்த பரப்பளவு 218 சதுர கிமீ. பாளையத்தோட எல்லைகள கூமாபட்டி, பேரையூர், சின்னக்கட்டளை வரை இருந்திருக்குது. இதுல சதுரகிரி மலையும் அடங்கும். சாப்டூர் பாளையம் ஆரம்ப காலகட்டத்தில் காமய நாயக்கனூர் , மருதூர் என்ற இரு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. இந்த பாளையத்தோட முதல் பாளையக்காரர் நாகையா ராஜா. இவர் நல்ல குதிரை வீரர், வாள் வீசுவதில் வல்லவர், மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கரோட போர்ப்படையில இருந்தவர். நாகையா ராஜா ஆட்சி செய்தப்ப சாப்டூர் பாளையத்தோட தலைநகரம் சாப்டூர்க்கு பக்கத்துல இருக்குற பழையூர். பழையூர் ல நாகையா ராஜாவாலா ஒரு அழகர் கோவிலும் கட்டப்பட்டது. இந்த அழகர் கோவில்ல உள்ள தெற்குச் சுவர்ல காமைய நாயக்கர், ராமசாமி நாயக்கர் கோவில் கட்டி நிலம் தானமாக கொடுத்த கல்வெட்டு இருக்குது. நாகையா ராஜா காலத்துக்கு அப்புறம் தலைநகரத்தை சாப்டூருக்கு மாத்துறாங்க. சாப்டூர்லயே ஒரு அரண்மனையையும் கட்டுறாங்க. இந்த அரண்மனை யோட மொத்த நிலப்பரப்பு 3 ஏக்கர். அரண்மனைக்குள்ளேயே கோர்ட் இருந்திருக்கு சிறைச்சாலை இருந்திருக்கு. ராஜாவை பார்க்க வந்த மக்கள் தங்குவதற்கு தங்கும் அறையும், மிகப்பெரிய அளவிலான உணவு கூடமும் இருந்திருக்கு.

Vinayagar Temple

அரண்மனைக்குள்ள வந்ததும் நம்ம முதல பார்க்கிறது விநாயகர் கோவிலைதான். விநாயகரை தரிசனம் பண்ணிட்டு அரண்மனைக்குள்ள போவோம்.

இந்த அரண்மனை 2 அடுக்கு தளங்களால் ஆனது. அரண்மனையை சுற்றி உள்ள கோட்டைச் சுவரும், அரண்மனை யோட நுழைவாயிலும் பழமையை நமக்கு எடுத்துக்காட்டுது. மரத்தூண்களும், சுண்ணாம்பு செங்கலால் ஆன தூண்களும் தாங்க திண்ணைப் பகுதியும் அதைத்தாண்டி உள்ளே போனா வளாகத்தில குடில் போன்ற தர்பார் மண்டபமும் காணப்படுது. இந்த வளாகத்தில் உள்ள சுவர் முழுக்க அரண்மனையோட முன்னோர்கள் புகைப்படங்களும், அரண்மனைக்கு நட்புறவுடன் இருந்தவர்கள் புகைப்படங்களும், நம்மால் பார்க்க முடியும்.

Zamendar of Saptur

சாப்டூர் ஜமீன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஜமீன் ஓட முக்கியமான வேலையா இருந்தது விவசாயத்தை மேம்படுத்துவது தான். நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் விவசாய நிலப்பரப்பு மட்டும் 75000 ஏக்கர். அரண்மனையோட தரைத்தளம் முழுவதுமே தானியங்கள் சேமித்து வைக்கும் அறையாதான் இருந்திருக்கு. முதல் தளம் வசிப்பிடமாகவும் இருந்திருக்கு.

இப்ப நீங்க பாக்குறது அரண்மனையோட பாதுகாப்புக்காக அந்த காலத்துல வைத்திருந்த ஆயுதங்கள். இதில் கட்டாரி முக்கியமான ஆயூதமாக கருதபடுகிறது.


இந்த அரண்மனைக்கு ஆங்கிலேயரை எதிர்த்த வீரம் நிறைந்த வரலாறும் உண்டு.


தலை வெட்டி துரை

ஆங்கிலேய தளபதியை, சிவகிரி பாளையக்காரர் கொன்று விட்டு காட்டுக்குள் தப்பி சென்று விட்டார். அவரை தேடி ஆங்கிலேய படைகள் வருவதை அறிந்த அவரது மனைவி தனது குழந்தைகளை சாப்டூர் ஜமீனில் ஒப்படைத்து, அவர்களை வளர்த்து சிவகிரிக்கு வாரிசாக்குங்கள் என கேட்டுக்கொண்டார், அதை சாப்டூர் பாளையக்காரர்கள் ஏற்றுக்கொண்டனர்.


பாளையக்காரர்களின் வாரிசுகளைத் தேடி, ஆங்கிலேய படை பேரையூரில் முகமிட்டார்கள். படையின் தளபதிகள் மட்டும் குதிரைகளில் சாப்டூர் வந்தனர். குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிய சிவகிரியின் வாரிசுகளை தளபதிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தளபதிகளுடன் வந்த ஐயா, பாளையக்காரர்கள் வட்டி என்னும் வெள்ளி தட்டில் தான் சாப்பிடுவார்கள் மற்றவர்களை சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி இதன் மூலம் நாம் சிவகிரியின் வாரிசுகளை கண்டறியலாம் என கூறினார். ஆனால் நடந்தது வேறு அனைவருக்கும் அனைவருக்கும் வட்டி தட்டில் சாப்பாடு பரிமாரப்பட்டது. அதனால் அவர்களால் சிவகிரியின் வாரிசுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகும் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு பெரியவர்கள் ஆனாதும் சிவகிரிக்கு சென்றார்கள்.


சிவகிரி வாரிசுகளுக்கு ஆதரவு அளித்த சாப்டூர் பாளையக்காரர் நாகயசாமி காமய நாயக்கரை, ஆங்கிலேய படைகள் சங்கரன் கோயிலில் பிடித்தது. ஆங்கிலேய தளபதி, அவர் தலையை துண்டிக்க உத்தரவிட்டார்.


அதன்படி, அவர் தலையை துண்டிக்கும் முன் கடைசி ஆசை என்ன என்று கேட்க, எனது தலையை நானே வெட்டிக் கொள்கிறேன் என்று கூறி அதை செய்து இருக்கிறார். அதன்பின் அவர் தலை வெட்டி நாகயசாமி காமய நாயக்கர் என அழைக்கப்பட்டிருக்கிறார். சாப்டூர் மக்கள் அவரை தலை வெட்டித் துரை என்று இன்றும் கடவுளில் ஒருவாராக வழிபடுகிறார்கள்.





19 views0 comments