Search

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பாண்டிய மன்னன் வெட்டிய பெருங்குளம்

Updated: Feb 14


ஸ்ரீவில்லிப்புத்தூர் அப்படின்னு சொன்னா நமக்கு பால்கோவா ஞாபகத்துக்கு வரும், ஆண்டாள் கோவில் ஞாபகத்துக்கு வரும், மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் ஞாபகத்துக்கு வரும். அந்த வரிசையில ஸ்ரீவில்லிபுத்தூர்க்குன்னு ஒரு வரலாற்றுச் சிறப்பு இருக்கு அந்த வரலாற்றுச் சிறப்பை தாங்கி நிற்கிற ஒரு இடம்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம். இது ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு மட்டும் பெரியகுளம் இல்லை, விருதுநகர் மாவட்டத்திற்கே இதுதான் பெரியகுளம். பெரியகுளம், பெரிய ஏரி, பெரிய கண்மாய் எப்படினாலும் சொல்லலாம். இப்பவுமே நகரத்துல மூன்றில் ஒரு பகுதி இந்த ஏரி தான் இருக்கு.

இந்த குளம் 1400 வருடங்களுக்கு முன்னால பாண்டிய மன்னனால் வெட்டப்பட்டது. பாண்டிய மன்னன் பராங்குசன் (கிபி.710 - கிபி.765) பெயரைத் தழுவி இந்த குளம் பராங்குசப் பேரேரின்னு அழைக்கப்பட்டது. இந்தக் குளம் பராங்குச புத்தூருக்கு சொந்தமான குளம்.


இந்த குளக்கரையில் ரங்கம்மாள் திருக்கோவிலுக்கு அருகில் ஏழு கண் மடை உள்ளது. ஏழு கண் போன்ற அமைப்புகள் மூலமாக தண்ணீர் வெளியே வருவதால் இதற்கு ஏழுகண் மடை என்று பெயர். இந்த ஏழு கண் மடையின் நடுவில் ஒரு கல் உள்ளது. மடையிலிருந்து வரும் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லில் மூன்று பக்கம் கல்வெட்டும் ஒரு பக்கம் விநாயகரின் புடைப்புச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மடையின் மேற்பகுதியில் கஜலட்சுமியின் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏழு கண்மடை 10ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராசசிம்மன் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டு "ஸவஸ்திஶ்ரீ கோச்சடைய மாறர்க்கு யாண்டு" என்று ஆரம்பிப்பதன் மூலமாக இக் கல்வெட்டு இரண்டாம் இராசசிம்மன் உடைய கல்வெட்டு என்று அறியப்படுகிறது. "இதனெதிர் ரு இவ்வாண்டு வில்லிபுத்தூர்" என்பதன் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு வில்லிபுத்தூர்ன்னு பெயர் இருந்ததை நம்மால் தெளிவாக அறிய முடியும்.


இந்த மடை மற்றும் வாய்க்காலை ஆன்மர் நாட்டு கிழவனான சங்கரன் மூரி அருளாக்கி சீர் படுத்தியதாகவும், அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் வில்லிபுத்தூரைச் சேர்ந்த மகாசபையினர் ஒன்றுகூடி பெருமைபடுத்தியதாகவும், பெருமைப்படுத்தியது மட்டுமில்லாம இந்த மடைக்கி அருளாக்கி பெருமடைன்னு பெயர் வைத்ததாகவும், இந்த வாய்க்காலுக்கு அருளாக்கி பெருங்கால்ன்னு பெயர் வைத்ததும் கல்வெட்டு மூலமாக தெரிய வருது.


இந்த கல்வெட்டு முக்கியமான ஒரு கல்வெட்டை பார்க்கப்படுது. அதற்கு காரணம் 1000 வருஷத்துக்கு முன்னால வில்லிபுத்தூர் அப்படிங்கறத தாங்கி வரதுதான். ஆயிரம் வருஷத்துக்கு முன்னாலயே ஸ்ரீவில்லிபுத்தூர வில்லிபுத்தூர்ன்னுதான் சொல்லி இருக்காங்க.


இந்த இடத்தை பற்றி மேலும் தெரிஞ்சுக்க கீழ இருக்கிற காணொளியை பாருங்க



35 views0 comments